Raga: சிம்மேந்திரமத்திபம் | Tala: ஆதி பல்லவி:ஊக்கமே வாழ்க்கையின் உயிர்நாடி - இதை
உள்ளம் கொண்டே உழைத்தால்
வரும் செல்வம் நம்மைத் தேடி
அநுபல்லவி:ஆக்க மிழந்தோ மென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடையார் எனும் குறள்வழி ஏற்கும்
சரணம்:அம்பு புதைப்பட்டாலும் ஆற்றல் குன்றாத யானை
அஞ்சி நடுங்கத் தாக்கும் புலியின் வல்லாண்மை
நம்பும் முயற்சியுள்ளார் தளர்ச்சி யில்லாமை
நாளும் பெருமை ஓங்கும்
கேளும் கிளையும் தாங்கும்
வெள்ளத் தனையது ஆகும் மலரின் நீட்டம்
உள்ளத் தனைய மாந்தர் உயர்வுறும் நாட்டம்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளலின் தேட்டம்
உள்ள உரமே ஏத்தும் உழவும் தொழிலும் வாழ்த்தும்