ஆற்றின் நீரானது வெளிப்பார்வைக்கு ஒரு அளவே காணப்படும். ஆனால், அதன் ஆழமானது, நிலப்பரப்புக்கு ஏற்றவாறு, மேடு பள்ளத்துக்கு ஏற்றபடி குறைவாகவும், கூடுதலாகவும் இருக்கும். அதன் ஆழத்திற்கு தக்கபடி நீர் பூக்களின் தாள் (தண்டு) நீளம் அமைந்திருக்கும்.
அதுபோல, உள்ளத்திலே எந்த அளவுக்கு மக்கள் ஆழமாக ஒரு பொருளைப் பற்றி சிந்தித்து முயற்சி செய்கிறார்களோ, அந்த அளவு வளர்ச்சியை பெறுகிறார்கள்.
"மக்கள் பெற்றிருக்கின்ற வாழ்வின் உயர்வு, அவர்கள் கொண்டிருக்கின்ற ஊக்கத்தின் அளவைப் பொறுத்ததே ஆகும்". இப்படியும் சிலர் கூறுகின்றனர்.