రాజ్యము

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.   (௭௱௩௰௧ - 731)
 

పాడి, పంట, ధనము పండిత ప్రాబల్య
మున్న దాని రాజ్యమున్న తగును. (౭౩౧)

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.   (௭௱௩௰௨ - 732)
 

కోరఁదగిన యట్టి భూరి సంపదలుండి
దిగులు దీర పండ దేశమగును. (౭౩౨)

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.   (௭௱௩௰௩ - 733)
 

పన్నులిచ్చి వలస పచ్చిన పోషించి
రక్తి చెడనిదగును రాజ్యమన్న. (౭౩౩)

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.   (௭௱௩௰௪ - 734)
 

తిండి భయములేక తీవ్రబాధలు లేక
రణ భయమ్ములేమి రాజ్యమగును. (౭౩౪)

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.   (௭௱௩௰௫ - 735)
 

అంతరంగ కలహ మన్యాయ వర్తన
రాజ్యహత్యలేమి రాజ్యమగును. (౭౩౫)

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.   (௭௱௩௰௬ - 736)
 

ఏ త్య్వద్రవమ్ము నెఱుగక వచ్చినన్
సష్టపడని దగును నాడటన్ను. (౭౩౬)

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.   (௭௱௩௰௭ - 737)
 

కోట కొండలుండి నిటితో నదులుండి
వర్షపాతమున్న వసుధె వసుధ. (౭౩౭)

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.   (௭௱௩௰௮ - 738)
 

సశ్యవృద్ధి, సుఖము, సంపద, సంరక్ష,
వ్యాధిలేమి శోభ వసుధకైదు. (౭౩౮)

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.   (௭௱௩௰௯ - 739)
 

పాటు కొంచెమైన ఫలిత మెక్కువయైన
దేశమునకె వేరు దేశమనఁగ. (౭౩౯)

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.   (௭௱௪௰ - 740)
 

పైన జెప్పినట్టి ప్రాభవమెంతున్న
రాజు క్రూరుడైన రాజ్యమగునె? (౭౪౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தோடி  |  Tala: ஆதி
பல்லவி:
வள்ளுவர் கண்ட திருநாடு - இந்த
வையக மெல்லாம் இதற்கில்லை ஈடு

அநுபல்லவி:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வமும் சேர்வதுநாடு என்றே திகழும்

சரணம்:
வருக வருக வென்னும் மாமலைத் தோற்றம்
வருபுனல் ஊற்றுடன் மழையும் பாராட்டும்
பெருகிடும் செல்வமுடன் விளைவின்பமும் போற்றும்
பேரன்பு காட்டி மக்கள் பசிப்பிணியை ஆற்றும்

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல் குறும்பும் இல்லாத நாடாகவே நிலைக்கும்
வல்லரண் கொண்டதாக வாழ்வும் வளமும் பொங்கும்
எல்லோரும் வாழும் நல்ல இசைமுரசும் முழங்கும்
Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22