Raga: அட்டாணா | Tala: ரூபகம் பல்லவி:ஓடிப் போ! போ! குற்றமே! நீ
ஓடிப் போய் விடுவாய்
ஒரு நொடியும் நிற்காதே
மறுபடி கால் வைக்காதே
அநுபல்லவி:தேடிப்பெற்ற அறிவுச் செல்வம்
தேர்ந்த மக்கள் ஆட்சிச் செல்வம்
கூடி வாழும் நேரத்திலே
குற்றமே நீ உட் புகுந்தால்
கொன்றிடுவோம் கூரம்பால்
சரணம்:அழவைத் தரும் பகையாய் வரும் குற்றமே
அறியாமை கல்லாமை ஈயாமை குற்றமே
வழிவிட்டுத் தன்புகழ் பேசிடும் குற்றமே
மான முறை கெட்டாயே
மாய வலைப் பட்டாயே
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்திடும் தூறுபோல் கெடும் எனவே மன்னர்
பெறுமதி கொள்ளவே பேசும் திருக்குறள்
பெரியாரின் துணை கண்டோம்
பிழை பட்டாய் உனை வேண்டோம்