జీవహింస

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.   (௨௱௫௰௧ - 251)
 

బలియ గోరి తాను బలిజేయు జీవుల
నట్టి కెట్టు లమరు తరుణ (౨౫౧)

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.   (௨௱௫௰௨ - 252)
 

దాచనట్టి చేత ధన ముండనట్లుగా
మాంస భక్షణమున మరుగు కరుణ. (౨౫౨)

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.   (௨௱௫௰௩ - 253)
 

నేన నున్నవాని చిత్తంబు రీతిగా
మాంస భక్షకునికి మానసమ్ము. (౨౫౩)

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.   (௨௱௫௰௪ - 254)
 

జాలి యనిన ప్రాణి జంపమితొఁబాటు
మాంస భక్షణమును మానుటగును. (౨౫౪)

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.   (௨௱௫௰௫ - 255)
 

జీవహింస లేమి జీవిత ధర్మంబు
నంజు డారగింప నరక మబ్బి. (౨౫౫)

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.   (௨௱௫௰௬ - 256)
 

మాంస మెవరు దినక మానిన వారైన
నమ్మువారు భునిని వమ్ముగారె. (౨౫౬)

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.   (௨௱௫௰௭ - 257)
 

మాంస భక్షణమ్ము మానుట మంచిది
చింత జేయ వ్రణమె జీవి కద్ది. (౨౫౭)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.   (௨௱௫௰௮ - 258)
 

జీవులందు నెల్ల జీవు డొక్కడె గాన
చంపు తినరుదేని సాధు జమలు. (౨౫౮)

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.   (௨௱௫௰௯ - 259)
 

వేయి యజ్ఞములను జేయుట కన్నను
చంసి తినక యున్న చాలు నదియె. (౨౫౯)

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.   (௨௱௬௰ - 260)
 

ప్రాణికోటి భక్తి భావాన ప్రణమిల్లు
ప్రాణ ఘాతకమును మాను వాని. (౨౬౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஆரபி  |  Tala: ரூபகம்
பல்லவி:
உயிரைக் கொன்று தின்னலாகுமா - நீ
உடலைக் காக்க

அநுபல்லவி:
பயிரைக் காக்கும் உழவன் போல
பசுவைக் காக்கும் ஆயன் போல
உயிரைக் காக்கப் பிறந்த நீங்கள்
உள்ளங் கொண்டே ஊனை விரும்பி

சரணம்:
தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிதூன் உண் பான்
தன்னிடம் நல்லருள் தங்குமோ; என்றும் தான்
தின்னும் பொருட்டுயிர்க் கொல்லா துலகெனின்
தேவை என்றே விலைக்காகவும் கொல்வரோ

சேரும் உணவில் புலால்தனைக் கொள்ளாதே
தேகத்தின் புண்ணது தீண்டவும் தீண்டாதே
கூறும் ஓராயிரம் வேள்வியினும் ஒன்றைக்
கொன்று தின்னாமையே நன்றென்னும் நம்குறள்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22