Raga: மோகனம் | Tala: ஆதி பல்லவி:விழிப்புடன் செல் மனமே - என்றும்
விழிப்புடன் செல் மனமே
அநுபல்லவி:விழிப்புடன் சென்றே நல்வினையெல்லாம் முடித்திடு
வீழ்வதும் வாழ்வதும் இயல்பெனக் கருதிடு
சரணம்:"கூத்தாட்டவை குழாத்தற்றே பெரும் செல்வம்
கொண்டதன் போக்கும் அது விளிந்தற்றெனவே" செல்லும்
பார்த்தது தெளிந்திந்தப் பாருக்கெடுத்துரைப்பாய்
பயன்படும் செல்வமுள்ளபோதே நயன் விளைப்பாய்
நல்ல செயல் புரிய நாள் எண்ணிப் பார்க்காதே
நாள் ஒருவாள் என்னும் நன்மதி தூர்க்காதே
வல்லமை கொண்டுலகில் மகிழ்ந்து முன்னேறு
வழியெல்லாம் திருக்குறள் மொழிநயம் கூறு