Raga: தேசு | Tala: ரூபகம் கண்ணிகள்:தெரிந்து வினையாடல் - கற்றுத்
தேர்ந்த வனைக் கூடல்
புரிந்து சமுதாயம் - என்றும்
போற்றத் தகும் நேயம்.
தலைவனிடத்தில் அன்பும் - மிகத்
தன்னறிவும் தெளிவும்
அலைக்கும் அவா வின்மையும் - வினை
யாளன் பெறுங் குணமாம்.
கால நிலை நாடும் - தன்
கடமையில் கண்ணோடும்
சீலமுள்ளோன் உரிமை - பெறச்
செய்யின் மிகும் திறமை.
பண்பை மாற்றும் பதவி - பெரும்
பழிசெய்யவும் உதவி
என்பதையும் நினைக்க - மனம்
என்றும் கோணா திருக்க
நன்மை தீமை யறிந்தும் - அவை
நாடி நலம் புரிந்தும்
தன்மையா னாளப் படும் - சீர்
தங்கும் திருக்குறளே.