కార్యనిర్ణయము

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.   (௫௱௰௨ - 512) 

వృద్ధిపఱచి సొమ్ము విఘ్నంబులకు నోర్చు
స్థిమిత పరుఁడె కార్య సిద్ధిపరుఁడు.  (౫౧౨)


తమిళ (தமிழ்)
செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக (௫௱௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும். (௫௱௰௨)
— மு. வரதராசன்


பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக. (௫௱௰௨)
— சாலமன் பாப்பையா


வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன் (௫௱௰௨)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀸𑀭𑀺 𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀺 𑀯𑀴𑀫𑁆𑀧𑀝𑀼𑀢𑁆𑀢𑀼 𑀉𑀶𑁆𑀶𑀯𑁃
𑀆𑀭𑀸𑀬𑁆𑀯𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓 𑀯𑀺𑀷𑁃 (𑁖𑁤𑁛𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Vaari Perukki Valampatuththu Utravai
Aaraaivaan Seyka Vinai
— (Transliteration)


vāri perukki vaḷampaṭuttu uṟṟavai
ārāyvāṉ ceyka viṉai.
— (Transliteration)


Entrust the job to one who can augment revenue, Foster wealth and find out hurdles.

హిందీ (हिन्दी)
आय-वृद्धि-साधन बढ़ा, धन-वर्द्धक कर कार्य ।
विघ्न परख जो टालता, वही करे नृप-कार्य ॥ (५१२)


మలయాళం (മലയാളം)
വരുമാനം, വരും മാർഗ്ഗം പെരുപ്പിച്ചും, തടസ്സങ്ങൾ നീക്കാൻ കേൽപ്പുടയോൻ തന്നെ കർമ്മത്തിന്നനുയോജ്യനാം (൫൱൰൨)

కన్నడ (ಕನ್ನಡ)
ಐಶ್ವರ್ಯ (ಹಣ) ಬರುವ ಮಾರ್ಗವನ್ನು ಹೆಚ್ಚಿಸಿ, ಅದನ್ನು ಅಭಿವೃದ್ದಿಪಡಿಸಿ, ಬರುವ ಕಂಟಕಗಳನ್ನು ಪರಿಶೀಲಿಸಿ, ನೀಗಿಸಬಲ್ಲವನೆ ಕಾರ್ಯಮುಖನಾಗಬೇಕು. (೫೧೨)

సంస్కృత (संस्कृतम्)
आयमार्ग परामृश्य धनं सम्पाद्य भूरिश: ।
तद्रक्षको विना विघ्नं राजकार्ये नियुज्यताम् ॥ (५१२)


సింహళ భాష (සිංහල)
දියුණුව උදාකර - අය පස නඟා ලන ලද විමැසිලි සිතින් යුත් - කිරිය උතූමන් සතූ ය ඇමදා (𑇥𑇳𑇪𑇢)

చైనీస్ (汉语)
能興利除弊者, 可用之士也. (五百十二)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Amati-lah orang yang dapat memajukan kekayaan negeri-mu dan dapat menycmboh pula penyakit yang mungkin menimpa-nya: ambil-lah dia untok menguruskan hal ahwal negara-mu.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
소득의원천을확대하고, 재산을증가시키고장애를방지할수있는자를채용해야한다. (五百十二)

రష్యన్ (Русский)
Пусть правит делами человек, который способен увеличивать казну, предвосхищать опасности

అరబ్ (العَرَبِيَّة)
إتخذ مديرا لشئونك رجلا الذى ينمى مصادر ثروة ملكك ويصلح ما قد فسد منها (٥١٢)


ఫ్రెంచ్ (Français)
Que celui qui a la capacité d'élargir les moyens des revenus, d'augmenter ainsi la prospérité (du Royaume), de découvrir et d'annihiler les obstacles qui l'empêchent serve (le Roi).

జర్మన్ (Deutsch)
Laß den handeln, der die Quellen des Kinkomnieni vergrößert, Reichtum förderr und Hindernisse beseitigt.

స్వీడిష్ (Svenska)
Må den uträtta konungens arbete som ökar landets inkomster, befordrar dess välstånd och undersöker allt som hindrar dess framåtskridande.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Qui (viam) reditus dilatans copiam pariat et impedimenta (ornnia) diiigenter exquirat, ille munus admiuistret. (DXII)

పోలిష్ (Polski)
Zadba skrzętnie o źródła państwowych dochodów: Cla, podatki i twe apanaże.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22