Raga: லதாங்கி | Tala: ஆதி பல்லவி:அன்பு வாழ்வில் வேண்டுமே - மெய்
அறிவு விளங்கும் வழியிதாமே
அநுபல்லவி:என்பில்லாத புழுவைக் காயும்
ஏறும் வெய்யில தனைப்போல
அன்பில்லாத உயிரை வருத்தும்
அறத்தின் தன்மை ஆதலாலே
சரணம்:உள்ளத் தன்பில்லாத பேர்க்கே உடலுறுப்பால் பயனுண்டாமோ
உண்மை அன்பை ஈனும் ஆர்வம் உடைமை பெருமை தள்ளலாமோ
கொள்ளத் தகுந்த அறமும் மறமும் கூட்டுகின்ற தன்மையாலே
உள்ள உயிரின் நிலையைக் காட்டும் உலகம் மகிழும் பணிகளாற்றும்