Raga: சங்கராபரணம் | Tala: ஆதி பல்லவி (தலைவி):இல்லை தவறவர்க்கே ஆயினும் ஊடுதல்
வல்லத வரளிக்கும் ஆறு நான் பெற்ற பெரும் பேறு
அநுபல்லவி (தலைவி):எல்லையில் நின்றூடலில் தோன்றும் சிறு துணி
நல்லளி வாடினும் பாடு பெறும் என்தோழி
சரணம் (தலைவி):நிலமும் நீரும் பொருந்திக் கலந்தது போலும் அன்பு
நிறைந்த என் காதலர்பால் உடுத்ற் கிணையு முண்டோ
நலம் பெறப் புல்லிவிடாப் புலவியுள் தோன்றுமே
நாயகி என்னுள்ளத்தை உடைக்கும் படையுமாமே
Raga: மத்தியமாவதி | Tala: ஆதி பல்லவி (தலைவன்):ஊடல் உவகை கொண்டேனே
உணவினும் உண்டதறல் இனிதாகவே
அநுபல்லவி (தலைவன்):ஊடலில் தோற்றவர் வென்ருர் அதுமன்னும்
கூடலில் காணப்படும் எனவே என்னும்
சரணம் (தலைவன்):இன்னும் வேண்ட அவள் ஊடுதல் வேண்டும்
இரவு காலமும் நீடுதல் வேண்டும்
நன்னுதல் ஊடுதல் காமத்திற் கின்பம்
நாடும் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்