పరవశమ్ము

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.   (௲௱௧ - 1101)
 

పరవశమ్ము జెందు పంచేంద్రియమ్ములు
పంకజాక్షి తోడు ప్రాప్తమైన. (౧౧౦౧)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.   (௲௱௨ - 1102)
 

చాలినన్ని గలవు జబ్బుకు మందులు
వలపు జబ్బుకెల్లఁ వనితె మందు. (౧౧౦౨)

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.   (௲௱௩ - 1103)
 

పద్మ నేత్రుపథము పడతి కొగిలికన్న
నద్జిక సుఖమునిచ్చు నదియెకొదు. (౧౧౦౩)

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.   (௲௱௪ - 1104)
 

తాకకున్న వేడి తాకిన చల్లన
నింతనిప్పు వనిత చెంతఁ గలది. (౧౧౦౪)

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.   (௲௱௫ - 1105)
 

కలసినప్పుడెల్ల నలివేణి కాగిలి
చొక్కఁ జొక్కఁ మిగుల సుఖమునిచ్చు. (౧౧౦౫)

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.   (௲௱௬ - 1106)
 

కలికి కరములందు గల దమృతం బొకో
తాకినంతఁ దనియుచుండు నొడలు. (౧౧౦౬)

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.   (௲௱௭ - 1107)
 

అతివ కొగలింపు లాకలిదప్పుల
మాన్ప గలుగునట్టి మహిమగలది. (౧౧౦౭)

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.   (௲௱௮ - 1108)
 

విందుబెట్టి కుడుచు చందంబుగా నుండు
కలికి కొగలింప గలుగు సుఖము. (౧౧౦౮)

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.   (௲௱௯ - 1109)
 

కలిసినట్లు గలసి కలహించి కూడుట
కామకళకు ప్రణయ ధామమగును. (౧౧౦౯)

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.   (௲௱௰ - 1110)
 

తెలియ్ఁ దెలియఁ దెలియుఁ దెలియనిదేమని
కలియఁ గలియనట్లె కామ కళయు. (౧౧౧౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: மிஸ்ரசாப்பு
கண்ணிகள்:
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளதாம் உண்மையில் - காதல்
கொண்டவர் தாம் புணர்ச்சி மகிழ்தலும் பெண்மையில்

தொட்டபோதெல்லாம் துளிர்க்கும் பட்டுமேனிப் பாவையிவளின்
தோளிரண்டும் அமிழ்தினாலே இயன்றதோ - இந்த
நாளின் இன்பம் பருவமழையாய்ப் பொழிந்ததோ

நீங்கும் போது வெம்மை செய்யும் நெருங்கும்போது தண்மைபெய்யும்
நிலவு போன்றாள் நெருப்பை எங்ஙனம் பெற்றனள் - என்னை
விலகிடாது தன் நோய்க்கும் மருந்தாய் உற்றனள்

ஊடல் உணர்தல் புணர்தல் காதல் கூடியார்தாம் பெற்றபயனாய்
உள்ளம் விரும்பும் யாவும் இவளிடம் தோன்றுதே - ஒரு
கள்ளமும் இல்லாது பகுத்துண்ணல் போன்றதே

பூமருவும் வண்டு போலவும் மாமரத்தில் மயிலைப் போலவும்
காமவல்லியின் தோளில் துயின்றிடும் துயில்எனில் - அந்தத்
தாமரைக் கண்ணான் உலகும் இனிது கொல்

அறியும்தோறும் அறியும்தோறும் அறிந்திடாமையைக் காண்பதேபோல்
அரியநூற் பயனாகும் சேயிழை இன்பமே - வாழ்க்கை
புரியவே எனை வாழ்த்திடும் குறள் செல்வமே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22