శౌర్యము

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.   (௭௱௭௰௧ - 771)
 

నిలువవలదు మాదు నేతకు నెదురొడ్డి
నిలచినట్టివారి శిలల జూడు. (౭౭౧)

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.   (௭௱௭௰௨ - 772)
 

చెవులపిల్లి గురికి బిక్కు బాణము కన్న
నేన్గు తప్పుకొన్న యీటె మేలు (౭౭౨)

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.   (௭௱௭௰௩ - 773)
 

శౌర్యమందు గొప్ప శౌర్యము పగతుని
దుర్దినంబులందు తోడువడుట. (౭౭౩)

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.   (௭௱௭௰௪ - 774)
 

చేత బరిసెలేని చింతను బోగొట్టె
రొమ్మునగల యీటె రోషముసగి. (౭౭౪)

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.   (௭௱௭௰௫ - 775)
 

అదిరెనేని రెప్ప యెదురైన బఅణమ్ము
లవజయంబున కదె యానవాలు. (౭౭౫)

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.   (௭௱௭௰௬ - 776)
 

గాయపడనిఒ నాళ్ళు గణియించి వీరుండు
వ్యర్థమాయె నంచు వ్యసనపడును. (౭౭౬)

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.   (௭௱௭௰௭ - 777)
 

వీర కంకణమ్ము విభునిచే బడయంగ
ప్రాణమీయ వీరవరుండు గోరు. (౭౭౭)

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.   (௭௱௭௰௮ - 778)
 

రాజు వలదటన్న రణరంగమున నుండి
వీరవరుఁడు రాడు వెన్ను చూసి. (౭౭౮)

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.   (௭௱௭௰௯ - 779)
 

లక్ష్యమునకు నుసురు లక్ష్యంబు జేయని
వీరుఁ దోషములను వెదక రెవరు. (౭౭౯)

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.   (௭௱௮௰ - 780)
 

చావుఁ గోరుకొనును సామ్రాట్టు కన్నుల
నీరు గారునట్లు వీరవరుఁడు. (౭౮౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான்பியாக்  |  Tala: ரூபகம்
பல்லவி:
படையின் செருக்குப் பார்க்கத் தகுந்த தமிழ்ப்
பண் பாட்டில் முளைத்த திது

அநுபல்லவி:
படையின் மாட்சி பயின்று தேர்ந்து
படுகளத்தில் வந்து நின்று
இடையூற்றிற்கும் அஞ்சிடாமல்
எதிர்ப் படையைச் சிதற அடிக்கும்

சரணம்:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும் - தன்
மெய்வேல் பறியா நகும் - வீரன்
மெய்யில் விழுப்புண் படாத வாழ்நாளெல்லாம்
வீணாளாய் எண்ணுவன் எடுத்து - புகழ்
வெண்டுவன் போர்முனை அடுத்து

கான முயல் எய்த அம்பினில் யானையை
எய்து பிழைத்த வேல் ஏந்தும் - யானை
எய்து பிழைத்த வேல் ஏந்தும்
ஆனதன் பேராண்மை காட்டவும் பகைக்கும்
அன்பு பேராண்மை காட்டவும் பகைக்கும்
அன்பு கொண்டுதவும் பாரீர் - உண்மை
அன்பு கொண்டுதவும் பாரீர்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22