Raga: அம்சாநந்தி | Tala: ஆதி பல்லவி:ஆள்வினை உடைமையே அயர்வில்லா முயற்சி - மக்கள்
அரசு விளங்க வரும் புதுமலர்ச்சி உலகில்
அநுபல்லவி:வாள்வலி யோடுதம் தோள் வலியும் சிறக்கும்
வையகம் வாழ்வுறவே செய்யும் தொழில் நிறக்கும்
சரணம்:உறங்கிடுவோன் முகத்தில் உறும் கரும் மூதேவி
உழைப்பவன் தாளினில் உறைவாள் சீதேவி
திறங்கொள்ளும் நன் முயற்சித் திருனைவியாக்கு மன்றோ
தேர்ந்த உழைப்பினைப் போல்சிறக்கும் பொருள் வேறுண்டோ
தாளாண்மை யுள்ளான் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னும் செருக்கதும் இங்குற்றே
கேளாரும் கேட்கவே குறள் முர சொலிக்கும்
கேளிர் துன்பம் துடைக்கும் தூணாகவும் நிலைக்கும்