Raga: கல்யாணி | Tala: ரூபகம் பல்லவி:பண்பு கொண்டு வாழ வேண்டுமே - நல்ல
பண்பு கொண்டு வாழ வேண்டுமே
அநுபல்லவி:அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கின் பங்கினைக் கண்டும்
சரணம்:அரம் போலும் கூர்மையுடையோர் ஆன போதிலும்
அழகாகவே உடலுறுப்புகள் அமைந்திருந் தாலும்
மரம் போல்வர் மக்கள் பண்பில்லாதவர் என்னும்
மாறில்லாமல் பகைவருள்ளும் மலர்ந்திட நண்ணும்
பகற் காலமும் இரவாகிடும் பாலும் நஞ்சாகும்
பண்பில்லாதார் செல்வமும் அதுபோலவே காணும்
புகழும் நயனுடையார் நன்றி புரியும் தன்மையால்
பூமி உள்ளது என்னும் உண்மையைப் புகலும் குறளதால்