స్థానబలము

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.   (௪௱௯௰௧ - 491)
 

ముట్టడింపరాదు తిట్టు తిట్టగ రాదు
తెలిసికొనక స్థానబలము ముందు (౪౯౧)

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.   (௪௱௯௰௨ - 492)
 

బహువిధాల మేలు బగతుర బరిమార్ప
దుర్గమందె గెలువు దొఱకునేని. (౪౯౨)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.   (௪௱௯௰௩ - 493)
 

బలము లేక యున్న బలమబ్బు దానంత
సాహసించునేని స్థాన మెఱిఁగి (౪౯౩)

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.   (௪௱௯௰௪ - 494)
 

ఎదిరి యూహలన్ని కుదరకఁ జెడిపోవు
తగవు నెఱపునేని స్థానమెఱిఁగి. (౪౯౪)

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.   (௪௱௯௰௫ - 495)
 

నీటిలోన ముసలి నిగిడి యేనుగఁబట్టు
కుక్క దాని నేలనక్కి కఱచు. (౪౯౫)

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.   (௪௱௯௰௬ - 496)
 

రథము నీటిమీద రవ్వంత సాగదు
నావ నేలమీద నడువదడుగు. (౪౯౬)

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்   (௪௱௯௰௭ - 497)
 

సాహసమ్ము కన్న సాయమ్ము బనిలేదు
స్థాన మెఱిఁగి జేయు జ్ఞానమున్న. (౪౯౭)

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.   (௪௱௯௰௮ - 498)
 

స్వస్థలంబు నందు స్వల్పమౌ సైన్యంబె
యెదిరి నెదుర గల్గు నినుమడించి. (౪౯౮)

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.   (௪௱௯௰௯ - 499)
 

కోట లేక నేన కొఱత గానున్నను
గెలువగాదు వాని స్థలము నందు. (౪౯౯)

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.   (௫௱ - 500)
 

యుద్ధ భూమిలోనఁ యుద్ధండమౌ కరి
బురదజిక్క నక్క లర్అచి కఱచు. (౫౦౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்தோளம்  |  Tala: கண்ட ஆதி
பல்லவி:
நிலையான இடம் கண்டோம் நெஞ்சே - இனி
நேர்வரும் பகை யெல்லாம்
நெருப்பின் முன் பஞ்சே

அநுபல்லவி:
குலையாத வலிவோடு காலமும் கண்டு
கூடித் தொழில் செய்யவே
குடியாட்சி இடம் கொண்டு

சரணம்:
நீரினில் வலிவுள்ள முதலைபோல் படகு போல்
நிலத்தினில் வலிவுள்ள யானைபோல் தேர் போல்
சீரிடம் மாறாத செயல்திறமே பெருக
செல்லு மிடத்தில் மக்கள் சிறப்புறவே வருக

"எண்ணியார் எண்ணமிழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்" என்னும் குறள் புரிந்து
திண்ணியராக நாட்டின் தேவைக்கே உழைப்போம்
தீமையெல்லாம் ஒழித்தே நன்மையில் தழைப்போம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22