సత్క్రియ

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.   (௬௱௫௰௧ - 651)
 

తోడు మంచిదైన తోడాను సంపద
శిష్ట వృత్తి సకల సిరుల నిచ్చు. (౬౫౧)

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.   (௬௱௫௰௨ - 652)
 

ఆచరింప గవల దపకీర్తి దెచ్చెడి
కార్యములను సర్వకాలమందు. (౬౫౨)

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.   (௬௱௫௰௩ - 653)
 

రాను రాను వైకి రాగోరు వారలు
బొగడఁబడని బనులఁ దెగడవలయు. (౬౫౩)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.   (௬௱௫௰௪ - 654)
 

గాసితోడ నెన్ని కష్టాల పాలైన
చిత్త బలులు హీనవృత్తి దిగరు. (౬౫౪)

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.   (௬௱௫௰௫ - 655)
 

చేయరాదు వెనక జింతించు పనులను
చేసియున్న మఱల చేయవలదు. (౬౫౫)

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.   (௬௱௫௰௬ - 656)
 

కన్నతల్లి యాకలన్నను, దానికై
తప్పుదారి ద్రొక్క దగవు గాదు. (౬౫౬)

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.   (௬௱௫௰௭ - 657)
 

దుష్కృతంబు వలన దొర యౌటకన్నను
వేదవడిన శిష్టవృత్తి మేలు. (౬౫౭)

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.   (௬௱௫௰௮ - 658)
 

చేయదగని పనుల జేయంగ లాభమ్ము
కలుగుటైన కీడు గలుగు మఱల. (౬౫౮)

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.   (௬௱௫௰௯ - 659)
 

దుఃఖ పెట్టి యొరుల దోచిన ద్రవ్యమ్ము
దుఃఖ పడగ జేసి తొలగిపోవు. (౬౫౯)

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.   (௬௱௬௰ - 660)
 

మోసగించు వృత్తి దాచిన సంపద
యోటికుండలోని నీటి విధము. (౬౬౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பைரவி  |  Tala: ஆதி
பல்லவி:
பழிவரும் வழியினில் பொருளைச் செய்யாதீர்
பச்சை மண் கலத்தில் தண்ணீரைப் பெய்யாதீர்

அநுபல்லவி:
அழிவு வராத நல்ல வழியினில் பொருள் தேடி
ஆட்சி நடத்த வேண்டும் வினைத்தூய்மையை நாடி

சரணம்:
புலி பசித்தாலும் என்ன? புல்லைத் தின்ன ஓடாது
புகழும் சான்றோர் உள்ளமும் வறுமையால் வாடாது
எலிபோன்ற கீழோர் செல்வம் என்றுமே பழிப்பாம்
இழப்பினும் பிற்பயக்கும் நல்லவையே சிறப்பாம்

தனை "ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை எனும்" குறள் வழிநிற்க
வினைநலம் வேண்டியவை எல்லாமே தந்திடும்
அனைவருமே போற்றிப் புகழ முன் வந்திடும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22