Raga: காம்போதி | Tala: ஆதி பல்லவி:காணும் கண்ணோட்டம் இனிதே - உலகில்
காணும் கண்ணோட்டம் இனிதே
காட்சிக் கெளிய இறைமாட்சியதன் அழகைக்
அநுபல்லவி:பூணும் அணி பணிகள் பொன் வயிர மென்றாலும்
காணும் கண்ணோட்டத்தின் முன் கருதவும் நிகராகுமோ
சரணம்:மண்ணோடியைந்த மரம் எனும் வசை தீரவும்
மனிதன் கண் புண்படாத வழியினைச் சாரவும்
பண்ணோடியைந்த தமிழ்ப் பண்பாடல் தேறவும்
பாங்குறும் தன் கருமம் சிதையாது
தாங்கிடும் வல்லமையும் குறையாது
ஒறுத்தாற்றும் பண்பினார்க் காணும் கண்ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலையெனும் குறள்நாடி
வெறுத்திடார் நஞ்சுண்ணவும் விரும்புவார் கூடி
விளங்கிடவே உயிர்க்கருள் செயும் வாயில்
களங்கமிலாத நல்லாட்சியின் கோயில்