Raga: மாண்டு | Tala: ஆதி பல்லவி:ஈரமில்லாதவரின் தீ நட்பு
இருந்தென்ன போ யென்ன
அவரால் பெறும் சிறப்பு
அநுபல்லவி:ஓரத்தில் காத்திருக்கும் நீர்ப் பரவைக் கூட்டம்
உள்ளவை தீர்ந்த பின்னே எடுக்குமே ஓட்டம்
சரணம்:படுகளத்தில் விட்டோடும் குதிரையைப் போலும்
பகட்டும் விலைமகளிர் கள்வரைப் போலும்
கெடுமிடத்தில் தவிக்க விடுமிவர்கள் உறவே
கிளைக்க விடாமல் செய்யவேண்டும் வேர் அறவே
பொய் நகை வகையாரின் நட்பினும் பகையே
புரிந்திடும் நன்மை பத்துக் கோடியாம் தொகையே
செய்தே மஞ்சாராச் சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்றெனும் குறள் மேன்மை