Raga: சிந்துபைரவி | Tala: ஆதி பல்லவி:ஆசை நோயை அழிப்பாய் - நாளும்
அன்பினிலே செழிப்பாய் நெஞ்சமே
அநுபல்லவி:ஆசையினால் வரும் கேடோ அநேகம்
ஆகாது ஆகாது உனக்கதில் பாகம்
சரணம்:துன்பம் தரும் அவாவின் தொடர்பு கொள்ளாதே
தூய நல்வாழ்வு பெற்றால் துயரம் இராதே
"இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்" என்று குறளே பன்னும்