కలహ సూక్ష్మత

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.   (௲௩௱௰௧ - 1311)
 

అతని వెడద రొమ్ము నంటనైతిని దాకి
ముగ్దలెల్ల జూచి మురిసిరౌట. (౧౩౧౧)

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.   (௲௩௱௰௨ - 1312)
 

తుమ్మె తుమ్మునంత తుమ్ముకు నూరని
పలుకరింతు ననుచు నలుక మాని. (౧౩౧౨)

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.   (௲௩௱௰௩ - 1313)
 

మాల వేసుకొంటి మానిని వెంటనే
ఎవరు చూడ వేషమిట్టు లనియె. (౧౩౧౩)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.   (௲௩௱௰௪ - 1314)
 

ఎక్కువ గలదంటి మక్కువ నీపైన
అందు కలిగె నెవరి కన్న యనుచు. (౧౩౧౪)

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.   (௲௩௱௰௫ - 1315)
 

ఇంక నిన్ను విడువ నీ జన్మకని జెప్ప
కార దొడగె నీరు కండ్లనుండి. (౧౩౧౫)

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.   (௲௩௱௰௬ - 1316)
 

తలచుచుంటినంటి తలుపంగ మరచితో
అనుచు విడచె గౌగిలిని తనంత. (౧౩౧౬)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.   (௲௩௱௰௭ - 1317)
 

మంగళమనె తుమ్ము మరునిముసమ్ము కే
ఎవరి దలచి తుమ్మితివనె యలుక. (౧౩౧౭)

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.   (௲௩௱௰௮ - 1318)
 

తుమ్ము నణచుకొంటి తొయ్యలి వెంటనే
తలచుకొన్న దెవరు దెలుపమనియె. (౧౩౧౮)

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.   (௲௩௱௰௯ - 1319)
 

కొసరి కొసరి యెట్లొ కోపంబు దీర్పగా
ఎవరు నేర్పరనుచు యింతి యలిగె. (౧౩౧౯)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.   (௲௩௱௨௰ - 1320)
 

మౌనముగను జూడ మనసులో నీకున్న
మగువ యెవ్వతె యని మరల యలిగె. (౧౩౨౦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: வாசஸ்பதி  |  Tala: ஆதி
பல்லவி:
பாட்டுடைத் தலைவி என் பைந்தமிழ்க் காதலி
காட்டும் புலவி நுணுக்கம்
காதால் வாழ்வில் எனை அவள் வசப்படுத்தும்

அநுபல்லவி:
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்றே வெகுண்டுரைக்கும்

சரணம்:
பட்டும் படாமலும் என் பக்கத்திலே இருப்பாள்
தொட்டால் சிணுங்கிடுவாள் தோளில் முகம்கவிழ்ப்பாள்
விட்டுச் செல்வேனோ என்றென் விழிமேல் விழியை வைப்பாள்
வேண்டிப் பணிந்திட்டாலும் வித்தை எங்கே கற்றீர் என்பாள்

அச்சுப் பதுமையைப் போல் அசையாமல் வீற்றிருப்பாள்
ஆசை தீரப் பார்த்திட்டாலும் யாரை எண்ணிப் பார்த்தீர் என்பாள்
இச்சென்று தும்மினாலும் எவளோ நினைத்தாள் என்பாள்
இப்படியே எதிலும் ஊடிப் பின் கூடிக் கொள்வாள்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22