Raga: சக்கரவாகம் | Tala: ரூபகம் கண்ணிகள்:கண்டொன்று பேசாதே - பிறரைக்
காணாமல் ஏசாதே
கொண்ட கருத்தினை இரண்டு துண்டாக்குதல்
குணமில்லாச் செய்கையன்றோ
முன்னால் புகழாதே - அவரைப்
பின்னால் இகழாதே
"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்"
புறங்கூறும் பொய்யொழுக்கம் - கொண்டு
பூமியில் வாழ்தலினும்
அறங்கூறும் வழிசென்று வறுமையில் மாய்வதே
அவனியில் நன்மதிப்பாம்
உள்ளம் திறந்து சொல்வாய் - என்றும்
உண்மைச் சுடர் விரிவாய்
தெள்ளமுதாகும் நம் செந்தமிழின் குறள்
தேர்ந்து நலம் பெறுவாய்