Raga: ஹேமாதி | Tala: ஆதி பல்லவி:சீரைத் தேடின் எரைத் தேடு
செய்யும் தொழிலுக் கெல்லாம்
இது முதலீடு
அநுபல்லவி:யாரையும் வேண்டாது அறநெறி தாண்டாது
அரும் பசிக்கே உதவும்
அமுதை விளைவு செய்யும்
சரணம்:விலகி இருந்தால் நிலம் வெறுக்கும் சிரிக்கும்
வேண்டி உழவு செய்தால் ஈண்டிவளம் சுரக்கும்
பலகுடை நீழலும் தம் குடைக்கீழ்க் காணலாம்
அலகுடை நீழலவர் எனும் விதம் சேரலாம்
பழந்தமிழ்ப் பண்பாடும் பலகலையும் நாடும்
பசுவினம் பால் பொழியும் பண்ணைகள் உறவாடும்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை எனும் குறள் இதனால்