குடும்ப வாழ்க்கையில், கணவனுக்கும் மனைவிக்கும் சில கடமைகள்- உரிமைகள் உள்ளன. அவரவர் கடமையை, அவரவர் உரிமையோடு செய்ய வேண்டும். தலையீடு உண்டானால் சச்சரவு உண்டாகும்.
கணவன் மீது மனைவிக்கு கோபம் ஏற்படுமானால், அவன் அவரிடம் இன்பத்தை அனுபவிக்க இயலாது.
அதுபோல, நிலம் வைத்திருப்பவன், தினந்தோறும் போய், நிலத்தை கவனித்து, செய்ய வேண்டியதை முறையாக செய்யவில்லையானால், நிலத்துக்கு வெறுப்பு உண்டாகிவிடும். அதாவது விளைச்சல் இல்லாமல் போய்விடக்கூடும்.
மனைவியின் கோபம், இன்பத்தைத் தடைசெய்யும்.
நிலத்தின் வெறுப்பு விளைச்சலைப் பாதிக்கும்.