Raga: மகாநந்தி | Tala: ஆதி பல்லவி:மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலை நீ வாழி பொழுது
அநுபல்லவி:காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய் வந்தென்னை வருத்துதே
சரணம்:வேதனை செய்யும் இந்த மாலைக்குத் தீங்கா செய்தேன்
விரும்பி வரும் காலைக்கு என்னதான் நன்மை செய்தேன்
காதலர் இல்வழி மாலை கொலைக் களத்து
ஏதிலார் போல வரும் என் நெஞ்சில் அலைபாயும்
நிழலும் நீரும் இல்லாத பாலையாய்த் தோணுதே
நெஞ்சில் இரக்கமிலார் செய்கையும் போன்றதே
அழல் போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை எனும் குறள் மெய்யானதே