Raga: சங்கராபரணம் | Tala: ஆதி பல்லவி:பெரியாரைத் துணைக் கொள்ளுவோம்
பெற்ற தன்னாட்சி நலம்
பெற்றிடவே என்றும்
அநுபல்லவி:அரிய வற்று ளெல்லாம் அரியதாம் இனியதாம்
அரண் படை பொருள் வன்மை
யாவினும் மேலதாம்
சரணம்:ஆலமரத்தினடி விழுதுகள் போலும்
அழகுமணி மண்டபத் தூண்களைப் போலும்
காலத்தில் தாங்கும் நல்ல பிள்ளைகள் போலும்
காக்கும் நன்றாகவே நோக்கும் கண்ணாகவே
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொள்ளலின் மேன்மை
குறளரி வூட்டும் நல்லார் தொடர்கைவிடாது
கோரும் நன்மைகள் எல்லாம் சேரும் தப்பாது