மழை பெய்வதனால்தான் உலகத்தில் வாழும் எல்லா உயிரினங்களும் செழிப்படைகின்றன. ஆனால் சிறிது காலம் மழை பெய்யாவிட்டால், உயிர்கள் அனைத்தும் வாடி அழிந்துவிடும்.
அதுபோல, புகழுடைய செல்வர்களின் செல்வதால், உலக மக்கள் நன்மை அடைகிறார்கள்.
அத்தகைய நல்ல செல்வர்களுக்கு செல்வம் குறைவாகி, சிறிது வறுமையும் வரலாம். ஆனால் அந்த வறுமை அவர்களை பாதிக்காது. செல்வம் மிகுந்த போது, பிறருக்கு பயன்பட வேண்டும் என்றே நினைப்பார்கள். செல்வம் குறைவான போதும், பிறருக்கு பயன்படுவது குறைகின்றது என்று வருந்துவார்களே அல்லாமல் தாங்கள் அதை இழந்துவிட்டதாக வருந்தவே மாட்டார்கள்.