மலையின்மேல் நிற்பவன் மலையை காட்டிலும் உயர்ந்தவனாக காணப்படுவான். எல்லோரும் அவனை பார்க்கின்றனர், புகழ்கின்றனர். அவன் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து நின்றால், மிக சிறியவனாக ஆகிவிடுகிறான்.
அதுபோல, ஒருவர் நல்ல செயல்கள் செய்து, பலருடைய பாராட்டுகளைப் பெற்று புகழ் அடைகிறான். அப்படிப்பட்டவன், ஒரு தாழ்வான- இழிவான காரியத்தை, சிறு குன்றிமணி (குண்டுமணி) அளவு செய்தாலும், அவனுடைய பெருமையும், புகழும் குறைந்து தாழ்ந்த நிலையை அடைவான். இகழப்படுவான்.
மலைமேல் நிற்பவன் என்பதற்கு பதிலாக மலையத்தனை பெருமை உடையவன் என்றும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.