குயவர் கையில் பிடித்திருக்கும் கருவியானது, மண்பாண்டம் உருவாகும் வரை காத்திருந்து பிறகு, மண்ணை விட்டுப் பிரித்து அறுத்து எடுப்பதற்கு உதவுகிறது.
அதுபோல, நம்மைச் சுற்றியுள்ள உட்பகைவன், நமக்கு வேண்டியவனைப் போலவும், நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு எல்லாம் உட்பட்டவனை போலவும் காத்திருந்து, தன்னுடைய காரியங்களையும் சாதித்துக் கொண்டு முடிவில், நம்மையும், செயலையும் அழித்துவிடுவான்.
ஆகையால், அவனுக்குத் தெரியாமலேயே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
உட்பகைவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.
(உட்பகை என்பது நண்பன் போல, உறவினன் போல இருந்து, பகையான காரியங்களை செய்து அழித்தல்)