తగని మైత్రి

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.   (௮௱௨௰௧ - 821) 

పైకి చెలిమిఁజూపి పగ నెదవర్తించు
చెలిమి, జెలిమిగాదు కొలిమిగాని.  (౮౨౧)


తమిళ (தமிழ்)
உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரது நட்பானது, நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால், எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும் (௮௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும். (௮௱௨௰௧)
— மு. வரதராசன்


மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது. (௮௱௨௰௧)
— சாலமன் பாப்பையா


மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும் (௮௱௨௰௧)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀻𑀭𑀺𑀝𑀫𑁆 𑀓𑀸𑀡𑀺𑀷𑁆 𑀏𑁆𑀶𑀺𑀢𑀶𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑀝𑁆𑀝𑀝𑁃
𑀦𑁂𑀭𑀸 𑀦𑀺𑀭𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀦𑀝𑁆𑀧𑀼 (𑁙𑁤𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Seeritam Kaanin Eridharkup Pattatai
Neraa Nirandhavar Natpu
— (Transliteration)


cīriṭam kāṇiṉ eṟitaṟkup paṭṭaṭai
nērā nirantavar naṭpu.
— (Transliteration)


Posing friends treat you like an anvil To strike you at the opportune time.

హిందీ (हिन्दी)
अंतरंग मैत्री नहीं, पर केवल बहिरंग ।
अवसर पा वह पीटती, पकड़ निहाई ढ़ंग । (८२१)


మలయాళం (മലയാളം)
മനസ്സിൽ സ്നേഹമില്ലാതെ പുറമേയഭിനയിച്ചീടും സ്നേഹഭാവം തരം നോക്കി അള്ളുന്ന ചിതയായിടും (൮൱൨൰൧)

కన్నడ (ಕನ್ನಡ)
ಮನಃಪೂರ್ವಕವಾಗಿ ಅಲ್ಲದೆ ಕೇವಲ ತೋರಿಕೆಗೆ ಹೊಂದಿಕೊಂಡವರ ಸ್ನೇಹವು ಸಮಯ ಬಂದಾಗ ಆಪತ್ತು ತರುವ ಬಲಿಗಲ್ಲಾಗುವುದು. (೮೨೧)

సంస్కృత (संस्कृतम्)
हार्दस्नेहविहीनस्य बाह्यस्नेहं वितन्वत: ।
मैत्री भग्ना भवेत् स्वर्णमय:खण्डगतं यथा ॥ (८२१)


సింహళ భాష (සිංහල)
නියම තැන ලැබුනම - තලන්නට කිණිහිරිය යි නුසුදුසු කපටි දන - සමග බැඳ ගත් නරක මිතූ දම (𑇨𑇳𑇫𑇡)

చైనీస్ (汉语)
敵人佯作親近, 蓋飲伺機爲大害耳. (八百二十一)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Persahabatan yang pura2 di-buat oleh sa-orang seteru ada-lah hanya landasan untok memukul-mu bila sahaja kesempatan-nya tiba.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
거짓우정이란적당한장소에서파괴하는모루와같다. (八百二十一)

రష్యన్ (Русский)
Дружба с лицемерными является наковальней для удара по тебе молотком, если подвернется для этого случаи

అరబ్ (العَرَبِيَّة)
العدد يتظاهر بانه صديق لك مثله كمثل سندان يضربك عليه بالمطرقة عند ما ينتهز الفرصة (٨٢١)


ఫ్రెంచ్ (Français)
L'amitié de ceux qui ne sont vos amis que parcequ'ils n'ont pas trouvé l'occasion (de vous nuire) est l'enclume (sur la quelle ilsvous aplatiront), s'ils en trouvent l'opportunité.

జర్మన్ (Deutsch)
Freundschaft mit solchen, die ohne wirkliche Zuneigung sind, ist wie das Zuschlagen auf den Amboß im rechten Augenblick.

స్వీడిష్ (Svenska)
Hycklande vänners vänskap är lik ett städ mot vilket de hamrar dig sönder när tillfälle därtill gives.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Amicitia eorum, qui (amore) non conjuncti se adjungant, si occasio se ostendat, incus erit, in qua tundatur. (DCCCXXI)

పోలిష్ (Polski)
Przyjaźń wroga to pretekst, by krzywdę uczynić W sposób równie podstępny jak podły.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பட்டைக் கல்லானவன் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

பட்டையில் இரும்பை பழுக்கக் காய்ச்சி வைத்துச் சம்மட்டியால் அடித்து தேவையான கருவியை செய்து கொள்கிறான் கொல்லன். வேலை முடிந்ததும் பட்டையை போட்டு விட்டு கொல்லன் போய்விடுவான்.

அதுபோல, இனிய நண்பன், தன்னுடைய காரியத்தை முடித்துக் கொள்வதற்க்காக வருவான். நம்மை வற்புறுத்தி, முடித்துக் கொண்டு பிறகு நம்மை விட்டுப் போய் விடுவான்.

அம்மாதிரி தீய நண்பனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"முன்பு பகைவனாக இருந்தவன் திடீரென்று நம்முடன் கலந்து நட்பு கொள்ள வந்தால் தக்க சமயம் பார்த்து நம்மை நசுக்குவதற்கு பட்டடையைப் போன்றவன் இன்று உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும்" என்றும் பொருள் கொள்ளலாம்.

(பட்டடை என்பது, பழுக்கக் காய்ச்சிய இரும்பை அடிப்பதற்கு தாங்கும் அடிக்கல்)


சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22