எலிகள் எல்லாம் பெரும் கூட்டமாகச் சேர்ந்து, கடல் அலை போல ஆரவாரம் செய்தாலும், அந்தக் கூட்டத்தால் என்ன செய்ய முடியும்? ஆனால், விஷம் உள்ள நல்ல பாம்பானது சீறி மூச்சு விட்டால் போதும். எல்லா எலிகளும் பயந்து நடுங்கி ஓடிவிடும்.
அதுபோல, வீரம் இல்லாத பெரிய படை, அணி திரண்டு இருந்தாலும், அஞ்சாத சிறிய படை வீரத்தோடு தாக்கினால், பெரிய படையானது அழிந்துவிடும்.
படையின் எண்ணிக்கை- அழகு முக்கியம் அல்ல; அஞ்சாமையும் வலிமையும் முக்கிய சிறப்புடையன.