பளபளப்பான வாளைக் கையில் ஏந்திக்கொண்டு, மனத்தில் தைரியம் இல்லாமல், போர்க்களத்துக்கு சென்று தேடி என்ன செய்ய முடியும்?
போர்க்களத்துக்கு செல்வோருக்கு, வாளும் வேண்டும் அதனைவிட அதை பயன்படுத்த துணிவும் வேண்டும்.
துணிவு இல்லை என்றால், வாள் கையில் இருந்தும் பயன்படாமல் உயிர்விட நேரிடும்.
அதுபோல, நூலறிவு உள்ளவன், அறிஞர் சபையில் சென்று பேசுவதற்கு பயப்படுகிறவன் அவன் கற்ற நூல் அறிவு அவனுக்கு இழிவை உண்டாக்குகிறது.
துணிவு இல்லாததால், சபையில் அவமதிப்பு ஏற்படுகிறது.