மேடான பாதையிலும் சேற்று நிலத்திலும் ஒரு, தடை உண்டான இடத்திலும், இதர்ப்பாட்டை கருதாமல் தன் வலிமையினால் வண்டியை விரைவாக இழுத்துக்கொண்டு போகிறது எருது (காளை மாடு).
அதுபோல, ஒரு செயலை மேற்கொள்ளும் முயற்சி உடையவன், தனக்குத் துன்பம்- இடையூறு வரும் போது, அதைக் கண்டு சலிப்படையாமல், தளர்வடையாமல், விடாமுயற்சியோடு, முன்னேறி செல்பவனை துன்பமானது, தானே துன்பப்பட்டு பின்னால் போய்விடும் (பின் வாங்கிப் போகும்).
துன்பமே, துன்பத்துக்கு உள்ளாகும் என்பதை உணர்த்துகிறது.