தேய்க்கும் கருவியான அரமானது, ஒன்றாக இருக்கின்ற பொருளை சிறிது சிறிதாக தேய்த்து பலவாக பிரித்து விடுகிறது.
(ரம்பமும் அப்படி செய்கிறது.)
அதுபோல, கொடூரமான சொல்லும், முறையற்ற கடும் தண்டனையும், பகைவரை வெல்லக்கூடிய அரசனுடைய வலிமையை சிறிது சிறிதாக குறைத்து விடும்.
வலிமையைக் குறைப்பது இரும்பை தேக்கும் அரம் என உணர்த்துகிறது.