குளக்கரையில் பெரிய மீனை பிடிப்பதற்காக கொக்கு வெகுநேரம் தருணம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கும்.
பெரிய மீனை கண்டதும் சரேல் என்று பாய்ந்து "லபக்" என்று கொத்தி கௌவிக்கொள்கிறது.
அதுபோல, ஒரு செயலை செய்வதற்கு முன் இடம், பொருள், ஏவல் என்று சொல்லுகின்றபடி அதற்கான சந்தர்ப்பம் வரும்வரை அமைதியாக காத்திருக்க வேண்டும்.
வாய்ப்பு வந்ததும், அதை கை நழுவ விடாமல் காரியத்தை நிறைவேற்றி, வெற்றி பெறலாம்.