மணலைத் தோண்டத் தோண்ட கேணியில் (கிணறு) தண்ணீர் ஊறிச் சுரந்துவரும்.
அதுபோல, மக்கள் கல்வியறிவு, தொடர்புடைய நூல்களைப் படிக்க, படிக்க அறிவு வளர்ச்சி அடைந்து தெளிவு பெறுவார்கள்.
பழமையான நூல்கள் நிறைய உள்ளன. புதுப் புது நூல்களும் வந்து கொண்டே இருக்கின்றன.
எனவே, படித்தது போதும் என்று இருக்கக் கூடாது; படிக்கப் படிக்க அறிவு புத்துணர்ச்சி பெறுகிறது.