ஒருவனுக்கு, யார் மீதோ, எதற்காகவோ கோபம் வந்தது. அந்த ஆத்திரத்தில் கையால் தரையை ஓங்கி அறைந்தான். கையில் வலி உண்டாயிற்று.
அதுபோல, கோபத்தால் பல கெடுதல்கள் ஏற்படும். எந்தக் காரியமும் சுலபமாக முடியாமல்போகும். கோபக்காரனிடம் எவரும் நெருங்கமாட்டார்கள். அப்படிப்பட்டவன் தனித்து இருந்து வேதனை அடைவான்.
தன்னுடைய அதிகாரத் தோரணையைக் காட்டுவதற்குச் சிலர் குடும்பத்தினரிடமோ, வேலை ஆட்களிடமோ கோபத்தை, ஒரு கருவியாகப் பயன்படுத்துவார்கள். அதனால் அவமானமும் துன்பமும் அடைய நேரிடும்.