மழை பொழிந்து, உயிர்கள் எல்லாவற்றையும் வாழவைக்கும் மேகத்துக்கு, இந்த உலகத்தினர் என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?
மேகமானது எந்த பிரதிபலனை எதிர்பார்த்து மழையைக் கொட்டுகிறது? மேகத்தின் இயல்பு மழை பொழிவது.
அதுபோல, கருணை உள்ளவர்கள் இயல்பாகவே, இரக்கப்பட்டு உதவிகளை செய்கிறார்கள். ஆனால், கடமையாக கருதி செய்கின்ற நன்மைக்கு, என்ன கைம்மாறு பிரதி உபகாரம் என்று எதிர்பார்ப்பதே இல்லை. கருணை உள்ளதால் அவர்கள் இயல்பாகவே நன்மை செய்கிறார்கள்.