வறுமையில் வாடுகின்றவனைப் பார்த்து, இரக்கத்தோடு அவனுக்கு ஏதாவது உதவி செய்ய முன் வருகிறான் ஒருவன். ஆனால், அதைக் கொடுக்க விடாமல், தடுத்து விடுகிறான் பொறாமைக்காரன்.
இல்லாதவனுக்கு இருப்பவன் கொடுப்பது இயல்பு. தனக்கு வேண்டுமானால், அவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாமே தவிர ஒருவனுக்கு கொடுப்பதை பொறாமையால் ஏன் தடுக்க வேண்டும்?
அப்படிப்பட்ட பொறாமைக்காரன் என்ன கதி அடைவான் என்றால், அவனும், அவன் குடும்பத்தினரும், உண்பதற்கு உணவும், உடுப்பதற்கு உடையும் கிடைக்காமல், திண்டாடித் தெருவில் நின்று தவிக்க நேரிடும்.