ఇల్లాలు

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.   (௫௰௯ - 59) 

పరువుఁ గాచునట్టి పత్నియే లేకున్న
నడగ ఠీవిరాదు నలువురందు.  (౫౯)


తమిళ (தமிழ்)
புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை (௫௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை. (௫௰௯)
— மு. வரதராசன்


புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை. (௫௰௯)
— சாலமன் பாப்பையா


புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள் (௫௰௯)
— மு. கருணாநிதி


బ్రాహ్మీ లిపి (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀓𑀵𑁆𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢 𑀇𑀮𑁆𑀮𑀺𑀮𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀇𑀮𑁆𑀮𑁃 𑀇𑀓𑀵𑁆𑀯𑀸𑀭𑁆𑀫𑀼𑀷𑁆
𑀏𑀶𑀼𑀧𑁄𑀮𑁆 𑀧𑀻𑀝𑀼 𑀦𑀝𑁃 (𑁟𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ఇంగ్లీష్ (English)
Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun
Erupol Peetu Natai
— (Transliteration)


pukaḻpurinta illilōrkku illai ikaḻvārmuṉ
ēṟupōl pīṭu naṭai.
— (Transliteration)


He whose wife is not praiseworthy Cannot walk with leonine gait before his critics.

హిందీ (हिन्दी)
जिसकी पत्नी को नहीं, घर के यश का मान ।
नहिं निन्दक के सामने, गति शार्दूल समान ॥ (५९)


మలయాళం (മലയാളം)
ഭക്തയാം പത്നിയില്ലാത്തോൻ പഴികൂറും വിരോധിതൻ മുമ്പാകെ വീരസിംഹം പോലഭിമാനം നടിച്ചിടാ (൫൰൯)

కన్నడ (ಕನ್ನಡ)
ಕೀರ್ತಿಯನ್ನು ಕಾಯುವ ಹೆಂಡತಿ ಇಲ್ಲದವರು, ತಮ್ಮನ್ನು ನಿಂದಿಸುವವರ ಎದುರಿನಲ್ಲಿ ಗಂಡೆದೆಯಿಂದ ತಲೆಯೆತ್ತಿ, ನಿರ್ಭೀತರಾಗಿ ನಡೆಯಲಾರರು. (೫೯)

సంస్కృత (संस्कृतम्)
पातिव्रत्ययशोहीनां भार्यां यो लभते नर: ।
सगार्वे सिंहवत् सो ऽयं शत्रुमध्ये न गच्छति ॥ (५९)


సింహళ భాష (සිංහල)
කිතූ කදඹ ඇති වූ - බිරියන් නැත්තවුන් හට සතූරන් ඉදිරියෙහි - කෙසරගූණැතිව සරනුනො හැකිය (𑇮𑇩)

చైనీస్ (汉语)
人之家室若蒙穢名, 其昂然闊步足以止誹謗之口. (五十九)
程曦 (古臘箴言)


మలయు (Melayu)
Lihat-lah lelaki yang burok nama rumah-tangga-nya: dia tidak dapat bcrjalan sa-megah singa di-tengah orang2 yang hendak mengechil- kan-nya.
Ismail Hussein (Tirukkural)


కొరియన్ (한국어)
좋은 아내가 없는 남자는 비방자 앞에에 사자처럼 당당하게 걸을 수 없다. (五十九)

రష్యన్ (Русский)
Муж, чья жена не стремится обрести похвалы за преданность не может гордо, подобно льву, прошествовать мимо своих хулителей

అరబ్ (العَرَبِيَّة)
الديوث لا يعرف قدر جمال تبختر الاسـد قبل أن يتخلص من الإنحطاطه (٥٩)


ఫ్రెంచ్ (Français)
A ceux dont les épouse ne désirent pas la bonne renommée, fait défaut la démarche haute du lion, devant leurs détracteurs.

జర్మన్ (Deutsch)
Wer keine Frau mit gutem Ruf hat, kann vor solchen, die schlecht von ihm reden, nicht wie ein Löwe einhergehen.

స్వీడిష్ (Svenska)
Den man som ej äger en ärbar hustru förmår ej med lejonets stolta steg träda fram inför sina belackare.
Yngve Frykholm (Tirukkural)


లాటిన్ (Latīna)
Cui non est uxor, laudem diligens, ei non est incessus tamquam leonis coram vituperatoribus. (LIX)

పోలిష్ (Polski)
Mąż zdradzony przez żonę, okryty sromotą, Nie potrafi uniknąć niesławy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மனைவியும் கௌரவமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவனுக்கு ஒழுக்கமும், பண்பும் உள்ள மனைவி அமைந்தால் அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கற்பு நெறியும், புகழத்தக்க குணமும் கொண்ட மனைவி வாய்க்காதவனின் நிலைமை என்ன?

தன்னை மதிக்காதவர் எதிரில் அவன், வீரதீரமாக, கம்பீரமாக நடந்துபோக முடியாது. அவன் வெட்கத்தால் கூனிக் குறுகிவிடுவான்.

கற்றத்தார், நண்பர்கள் முன்னே, ஆண் சிங்கம் போல் தலைநிமிர்ந்து, அவனால் நடந்து செல்ல முடியாது. ஆகவே, மனைவிக்கு அழகு- படிப்பைக் காட்டிலும் ஒழுக்கமும், இங்கிதமும் மிகவும் முக்கியம். அதுவே போற்றத்தக்கது.


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22