Repeated Word in Couplet Ending - "கெடும்"


அறத்துப்பால் / இல்லறவியல் / செய்ந்நன்றி அறிதல் / ௱௯ - 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / ஒழுக்கமுடைமை / ௱௩௰௪ - 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / அழுக்காறாமை / ௱௬௰௬ - 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.


அறத்துப்பால் / இல்லறவியல் / வெஃகாமை / ௱௭௰௬ - 176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.


அறத்துப்பால் / துறவறவியல் / கள்ளாமை / ௨௱௮௰௩ - 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.


பொருட்பால் / அரசியல் / குற்றங்கூறாமை / ௪௱௩௰௫ - 435
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.


பொருட்பால் / அரசியல் / குற்றங்கூறாமை / ௪௱௩௰௭ - 437
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.


பொருட்பால் / அரசியல் / பெரியாரைத் துணைக்கோடல் / ௪௱௪௰௮ - 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.


பொருட்பால் / அரசியல் / தெரிந்து செயல் வகை / ௪௱௬௰௬ - 466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்


பொருட்பால் / அரசியல் / வலியறிதல் / ௪௱௭௰௪ - 474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.


பொருட்பால் / அரசியல் / வலியறிதல் / ௪௱௭௰௯ - 479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.


பொருட்பால் / அரசியல் / வலியறிதல் / ௪௱௮௰ - 480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.


பொருட்பால் / அரசியல் / செங்கோன்மை / ௫௱௪௰௮ - 548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.


பொருட்பால் / அரசியல் / கொடுங்கோன்மை / ௫௱௫௰௩ - 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.


பொருட்பால் / அரசியல் / வெருவந்த செய்யாமை / ௫௱௬௰௩ - 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.


பொருட்பால் / அரசியல் / வெருவந்த செய்யாமை / ௫௱௬௰௪ - 564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.


பொருட்பால் / அரசியல் / வெருவந்த செய்யாமை / ௫௱௬௰௬ - 566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.


பொருட்பால் / அரசியல் / வெருவந்த செய்யாமை / ௫௱௬௰௯ - 569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.


பொருட்பால் / அரசியல் / மடியின்மை / ௬௱௧ - 601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.


பொருட்பால் / அரசியல் / மடியின்மை / ௬௱௯ - 609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.


பொருட்பால் / அரசியல் / ஆள்வினையுடைமை / ௬௱௰௪ - 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.


பொருட்பால் / அரசியல் / இடுக்கண் அழியாமை / ௬௱௨௰௨ - 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.


பொருட்பால் / படையியல் / படைமாட்சி / ௭௱௬௰௩ - 763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எல§ப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.


பொருட்பால் / நட்பியல் / பெரியாரைப் பிழையாமை / ௮௱௯௰௯ - 899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.


பொருட்பால் / குடியியல் / குடிசெயல்வகை / ௲௨௰௮ - 1028
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.


பொருட்பால் / குடியியல் / இரவு / ௲௫௰௬ - 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.


பொருட்பால் / குடியியல் / இரவச்சம் / ௲௬௰௯ - 1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.


காமத்துப்பால் / கற்பியல் / நினைந்தவர் புலம்பல் / ௲௨௱௩ - 1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.