गार्हस्थ्य

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.   (௪௰௧ - 41)
 

धर्मशील जो आश्रमी, गृही छोड़ कर तीन ।
स्थिर आश्रयदाता रहा, उनको गृही अदीन ॥ (४१)

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.   (௪௰௨ - 42)
 

उनका रक्षक है गृही, जो होते हैं दीन ।
जो अनाथ हैं, और जो, मृतजन आश्रयहीन ॥ (४२)

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.   (௪௰௩ - 43)
 

पितर देव फिर अतिथि जन, बन्धु स्वयं मिल पाँच ।
इनके प्रति कर्तव्य का, भरण धर्म है साँच ॥ (४३)

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.   (௪௰௪ - 44)
 

पापभीरु हो धन कमा, बाँट यथोचित अंश ।
जो भोगे उस पुरुष का, नष्ट न होगा वंश ॥ (४४)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.   (௪௰௫ - 45)
 

प्रेम- युक्त गार्हस्थ्य हो, तथा धर्म से पूर्ण ।
तो समझो वह धन्य है, तथा सुफल से पूर्ण ॥ (४५)

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.   (௪௰௬ - 46)
 

धर्म मार्ग पर यदि गृही, चलायगा निज धर्म ।
ग्रहण करे वह किसलिये, फिर अपराश्रम धर्म ॥ (४६)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.   (௪௰௭ - 47)
 

भरण गृहस्थी धर्म का, जो भी करे गृहस्थ ।
साधकगण के मध्य वह, होता है अग्रस्थ ॥ (४७)

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.   (௪௰௮ - 48)
 

अच्युत रह निज धर्म पर, सबको चला सुराह ।
क्षमाशील गार्हस्थ्य है, तापस्य से अचाह ॥ (४८)

அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.   (௪௰௯ - 49)
 

जीवन ही गार्हस्थ्य का, कहलाता है धर्म ।
अच्छा हो यदि वह बना, जन-निन्दा बिन धर्म ॥ (४९)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.   (௫௰ - 50)
 

इस जग में है जो गृही, धर्मनिष्ठ मतिमान ।
देवगणों में स्वर्ग के, पावेगा सम्मान ॥ (५०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கல்யாணி  |  Tala: ஆதி
பல்லவி:
இல்வாழ்க்கையைப் போல நல்வாழ்க்கை வேறேது
இதம் பெற நீயறிவாய் உலகினில்

அநுபல்லவி:
"இல்வாழ்வோன் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்றதுணை" என்றே சொல்லும் குறள்

சரணம்:
பழியேதும் தொடாராத வழிசென்று பொருள் தேடிப்
பகுத்துண்டு வாழும் மனப் பாங்குடனே
பரிவாக விருந்தோம்பிப் பலபேர்க்கும் துணையாகிப்
படர்கின்ற கிளையோடும் தான் வாழவே
அழியாத புகழ்மேவி அறங்கூறும் வழிநாடி
அனைவோரும் மதிக்கும் இல்லறம் சூழவே
அடுத்தோர்கள் பசித்துன்பம் அது கண்டிரங்கும் உண்மை

அன்பருள் அகத்திணை
நலமது உயர்ந்திட
அணுகி நாட்டமுடன்
முயன்றிடப் பயன்படும்
Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22