तप

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.   (௨௱௬௰௧ - 261)
 

तप नियमों को पालते, सहना कष्ट महान ।
जीव-हानि-वर्जन तथा, तप का यही निशान ॥ (२६१)

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.   (௨௱௬௰௨ - 262)
 

तप भी बस उनका रहा, जिनको है वह प्राप्त ।
यत्न वृथा उसके लिये, यदि हो वह अप्राप्त ॥ (२६२)

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.   (௨௱௬௰௩ - 263)
 

भोजनादि उपचार से, तपसी सेवा-धर्म ।
करने हित क्या अन्य सब, भूल गये तप-कर्म ॥ (२६३)

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.   (௨௱௬௰௪ - 264)
 

दुखदायी रिपु का दमन, प्रिय जन क उत्थान ।
स्मरण मात्र से हो सके, तप के बल अम्लान ॥ (२६४)

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.   (௨௱௬௰௫ - 265)
 

तप से सब कुछ प्राप्य हैं, जो चाहे जिस काल ।
इससे तप-साधन यहाँ, करना है तत्काल ॥ (२६५)

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.   (௨௱௬௰௬ - 266)
 

वही पुरुष कृतकृत्य है, जो करता तप-कर्म ।
करें कामवश अन्य सब, स्वहानिकारक कर्म ॥ (२६६)

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.   (௨௱௬௰௭ - 267)
 

तप तप कर ज्यों स्वर्ण की, होती निर्मल कान्ति ।
तपन ताप से ही तपी, चमक उठें उस भाँति ॥ (२६७)

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.   (௨௱௬௰௮ - 268)
 

आत्म-बोध जिनको हुआ, करके वश निज जीव ।
उनको करते वंदना, शेष जगत के जीव ॥ (२६८)

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.   (௨௱௬௰௯ - 269)
 

जिस तपसी को प्राप्त है, तप की शक्ति महान ।
यम पर भी उसकी विजय, संभव है तू जान ॥ (२६९)

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.   (௨௱௭௰ - 270)
 

निर्धन जन-गणना अधिक, इसका कौन निदान ।
तप नहिं करते बहुत जन, कम हैं तपोनिधान ॥ (२७०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: நாட்டக் குறிஞ்சி  |  Tala: ரூபகம்
பல்லவி:
மாதவமே மனிதனை உயர்த்தும்
மாநில மீதருள் வாழ்வினிலே பெறும்

அநுபல்லவி:
தீதவமென்பதில் திரிந்து கெடாமலே
திருவருளே பெற
ஒருமனதாய்க் கொள்ளும்

சரணம்:
தானமதில் உயர்வான தவமிது
தன் முயற்சிகொண்டே நாளும் தழைப்பது
ஞான ஒளிதர ஞாலத்துதித்தது
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை தருவது

"தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிரெல்லாம் தொழும்" எனவே குறள்
பொன்னென வாழ்க்கையின் போதனையே தரும்
பூமியில் வேண்டிய யாவையும் தான் பெறும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22