Raga: பூரி கல்யாணி | Tala: ஆதி பல்லவி:பழைமையைக் கைவிடலாமா - நட்பின்
பழைமையைக் கைவிடலாமா
பகைவரும் பாராட்டும் பண்பதும் கெடலாமா
அநுபல்லவி:பழைமை என்றுரைப்பதே யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடாத நட்பென ஓதும்
சரணம்:தொழிலுக்குத் துணையாகத் தோன்றி வளர்ந்த நட்பு
துன்பத்திலும் தமக்குத் தோழமைப் பூணும் நட்பு
"அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர்" என்னும் குறள் பண்பின்