Raga: கானடா | Tala: ஆதி பல்லவி:தோன்றும் குடிப் பெருமை - செய்யும்
தொழிலால் வரும் பெருமை உலகினில்
அநுபல்லவி:ஈன்றதாய் நாட்டினில் எடுத்த தன் பிறவியில்
ஏற்ற முறவே செயல் ஆற்றும் பெரியோர்களால்
சரணம்:செல்வமும் கல்வியும் சேர்ந்திடப் பெற்றாலும்
சிறியோர் பெரியோர்க்கிணை சேரார் எக்காலும்
நல்லவர் பெருமையை அறிகிலார் கீழோர்
நாளும் தன்னடக்கத்தால் நன்மை செய்வோர் மேலோர்
பெருமை உடையவர் ஆற்றுவர் ஆற்றின்
அருமை உடைய செயல் எனும் குறள் பாட்டின்
ஒருமை மகளிர்போல் தம்மைத்தாம் காப்பார்
ஒளி ஒருவர்க்குள்ளதாம் வெறுக்கையும் சேர்ப்பார்