Raga: தோடி | Tala: ரூபகம் பல்லவி:நல்லடக்கம் நாளும் வேண்டுமே
நாடும் செல்வன் நீயென்றாலும்
அநுபல்லவி:கல்வி அறிவு மிகுந்திட்டாலும்
கையில் பொருள்கள் குவிந்திட்டாலும்
செல்வத்தின் மேல் செல்வமாகச்
சிறக்கும் பண்பை மறக்கலாமா
சரணம்:"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு" என்று நம் குறள்
நேயமுடன் சொல்லும் நேர்மை வழியிர்செல்
நிலையில் திரியாத மலையென்னும் மான்புகொள்