परख कर कार्य सौंपना

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.   (௫௱௰௧ - 511)
 

भले-बुरे को परख जो, करता भला पसंद ।
उसके योग्य नियुक्ति को, करना सही प्रबन्ध ॥ (५११)

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.   (௫௱௰௨ - 512)
 

आय-वृद्धि-साधन बढ़ा, धन-वर्द्धक कर कार्य ।
विघ्न परख जो टालता, वही करे नृप-कार्य ॥ (५१२)

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.   (௫௱௰௩ - 513)
 

प्रेम, बुद्धि, दृढ़-चित्तता, निर्लोभता-सुनीति ।
चारों जिसमें पूर्ण हों, उसपर करो प्रतीति ॥ (५१३)

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.   (௫௱௰௪ - 514)
 

सभी तरह की परख से, योग्य दिखें जो लोग ।
उनमें कार्य निबाहते, विकृत बने बहु लोग ॥ (५१४)

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.   (௫௱௰௫ - 515)
 

जो करता है धैर्य से, खूब समझ सदुपाय ।
उसे छोड़ प्रिय बन्धु को, कार्य न सौंपा जाय ॥ (५१५)

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.   (௫௱௰௬ - 516)
 

कर्ता का लक्षण परख, परख कर्म की रीति ।
संयोजित कर काल से, सौंपों सहित प्रतीति ॥ (५१६)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.   (௫௱௰௭ - 517)
 

इस साधन से व्यक्ति यह, कर सकता यह कार्य ।
परिशीलन कर इस तरह, सौंप उसे वह कार्य ॥ (५१७)

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.   (௫௱௰௮ - 518)
 

यदि पाया इक व्यक्ति को, परख कार्य के योग्य ।
तो फिर उसे नियुक्त कर, पदवी देना योग्य ॥ (५१८)

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.   (௫௱௰௯ - 519)
 

तत्परता-वश कार्य में, हुआ मित्र व्यवहार ।
उसको समझे अन्यता, तो श्री जावे पार ॥ (५१९)

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.   (௫௱௨௰ - 520)
 

राज-भृत्य यदि विकृत नहिं, विकृत न होगा राज ।
रोज़ परखना चाहिये, नृप को उसका काज ॥ (५२०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேசு  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
தெரிந்து வினையாடல் - கற்றுத்
தேர்ந்த வனைக் கூடல்
புரிந்து சமுதாயம் - என்றும்
போற்றத் தகும் நேயம்.

தலைவனிடத்தில் அன்பும் - மிகத்
தன்னறிவும் தெளிவும்
அலைக்கும் அவா வின்மையும் - வினை
யாளன் பெறுங் குணமாம்.

கால நிலை நாடும் - தன்
கடமையில் கண்ணோடும்
சீலமுள்ளோன் உரிமை - பெறச்
செய்யின் மிகும் திறமை.

பண்பை மாற்றும் பதவி - பெரும்
பழிசெய்யவும் உதவி
என்பதையும் நினைக்க - மனம்
என்றும் கோணா திருக்க

நன்மை தீமை யறிந்தும் - அவை
நாடி நலம் புரிந்தும்
தன்மையா னாளப் படும் - சீர்
தங்கும் திருக்குறளே.




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22