अंगगच्छवि- नाशा

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.   (௲௨௱௩௰௧ - 1231)
 

प्रिय की स्मृति में जो तुझे, दुख दे गये सुदूर ।
रोते नयन सुमन निरख, लज्जित हैं बेनूर ॥ (१२३१)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.   (௲௨௱௩௰௨ - 1232)
 

पीले पड़ कर जो नयन, बरस रहे हैं नीर ।
मानों कहते निठुरता, प्रिय की जो बेपीर ॥ (१२३२)

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.   (௲௨௱௩௰௩ - 1233)
 

जो कंधे फूल रहे, जब था प्रिय-संयोग ।
मानों करते घोषणा, अब है दुसह वियोग ॥ (१२३३)

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.   (௲௨௱௩௰௪ - 1234)
 

स्वर्ण वलय जाते खिसक, कृश हैं कंधे पीन ।
प्रिय-वियोग से पूर्व की, छवि से हैं वे हीन ॥ (१२३४)

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.   (௲௨௱௩௰௫ - 1235)
 

वलय सहित सौन्दर्य भी, जिन कंधों को नष्ट ।
निष्ठुर के नैष्ठुर्य को, वे कहते हैं स्पष्ट ॥ (१२३५)

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.   (௲௨௱௩௰௬ - 1236)
 

स्कंध शिथिल चूड़ी सहित, देख मुझे जो आप ।
कहती हैं उनको निठुर, उससे पाती ताप ॥ (१२३६)

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.   (௲௨௱௩௰௭ - 1237)
 

यह आक्रान्दन स्कंध का, जो होता है क्षाम ।
सुना निठुर को रे हृदय, पाओ क्यों न सुनाम ॥ (१२३७)

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.   (௲௨௱௩௰௮ - 1238)
 

आलिंगन के पाश से, शिथिल किये जब हाथ ।
तत्क्षण पीला पड गया, सुकुमारी का माथ ॥ (१२३८)

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.   (௲௨௱௩௰௯ - 1239)
 

ज़रा हवा जब घुस गयी, आलिंगन के मध्य ।
मुग्धा के पीले पड़े, शीत बड़े दृग सद्य ॥ (१२३९)

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.   (௲௨௱௪௰ - 1240)
 

उज्ज्वल माथे से जनित, पीलापन को देख ।
पीलापन को नेत्र के, हुआ दुःख-अतिरेक ॥ (१२४०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: ஆதி
பல்லவி:
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண் - பாங்கி
நறுமலர் நாணின கண்

அநுபல்லவி:
அருமை மணாளரின் பிரிவை ஆற்றாமலே
அந்தோ உறுப்பு நலன்
அழிதலுக் கென்ன செய்வேன்

சரணம்:
கோரிக்கை நிறைவேறிக் கூடிக் களித்திருந்தோம்
குறையும் பொருளை வேண்டி நிறைபொருள் எனை மறந்தார்
வாரித் தழுவிய நாள் பூரித்த தோளிரண்டும்
வாடி மெலிந்ததுவே வளையும் கழன்றதுவே

உண்ணும் உணவும் வேண்டா வெறுப்பாகக் கசந்தது
ஊரிற் பறை அறைய உண்கண்ணும் பசந்தது
எண்ணும் நெஞ்சே நீ அந்தக் கொடியவர் முன் செல்வாயா?
என்தோளின் பூசல் சொல்லிப் பெருமையும் கொள்வாயா?




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22