Raga: கரகரப்பிரியா | Tala: ஆதி பல்லவி:குணநலமே பரவும் சான்றாண்மை
கொள்கை அறிந்தே செய்யும் நாளும் தன் கடமை
அநுபல்லவி:குணநலம் சான்றோர் நலனாகவே விளங்கும்
கொல்லாமை பிறர் தீமை சொல்லாமையும் வழங்கும்
சரணம்:அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பும் ஊன்றிய தூணாகும் மேன்மையது
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பென்னும் குறட்பரல்
இயற்கை ஊழி பெயர்ந்தாலும் தாம் பெயரார்
இன்மை ஆயிடினும் திண்மையே உடையார்
எண்ண மேவும் கடலே
என்னும் வாழ்வின் பொருளே
ஈடில்லாத நிறை கேடில்லாத பொறை
கூடி வாழும் முறை தேடியாரும் வரும்