Raga: இந்துஸ்தான் காப்பி | Tala: ஆதி பல்லவி:விரும்பலாகுமோ கள்ளை - அந்த
வேசியின் உறவினும் வெறுக்க வேண்டும் இதை
சரணம்:வரும் பொருள் யாவையும் இறைக்கும் - முன்பு
வாய்த்த நற்புகழையும் குறைக்கும்
இரும்பான தேகமும் வளைக்கும் - காவல்
இதயக் கோட்டையையும் துளைக்கும்
நீரினில் மூழ்கிய ஒருவன் - சொல்லும்
நீதியின் விளக்கமா பெருவன் - அவன்
ஊரில் எங்கும் நகைக்கப் படுவான் - தொழில்
ஊக்கமும் குன்றியே கெடுவான்
முன்னையோர் நல்வழியும் கெடுக்கும் - நல்லான்
முகமும் நாணிப் புறம் கொடுக்கும் - சொல்லத்
தன்னையே தான் மறந்திருக்கும் - பெற்ற
தாயின் அன்புள்ளமும் வெறுக்கும்
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் - என்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்பர் - இதை
நெஞ்சிற் கொண்டால் மயக்கம் தெளிவார் - குறள்
நீதியாம் கள்ளுண்ணாமை புரிவார்