शक्ति का बोध

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.   (௪௱௭௰௧ - 471)
 

निज बल रिपु-बल कार्य-बल, साथी-बल भी जान ।
सोच-समझ कर चाहिये, करना कार्य निदान ॥ (४७१)

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்   (௪௱௭௰௨ - 472)
 

साध्य कार्य को समझ कर, समझ कार्य हित ज्ञेय ।
जम कर धावा जो करे, उसको कुछ न अजेय ॥ (४७२)

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.   (௪௱௭௰௩ - 473)
 

बोध नहीं निज शक्ति का, वश हो कर उत्साह ।
कार्य शुरू कर, बीच में, मिटे कई नरनाह ॥ (४७३)

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.   (௪௱௭௰௪ - 474)
 

शान्ति-युक्त बरबात बिन, निज बल मान न जान ।
अहम्मन्य भी जो रहे, शीघ्र मिटेगा जान ॥ (४७४)

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.   (௪௱௭௰௫ - 475)
 

मोर-पंख से ही सही, छकड़ा लादा जाय ।
यदि लादो वह अत्यधिक, अक्ष भग्न हो जाय ॥ (४७५)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.   (௪௱௭௰௬ - 476)
 

चढ़ा उच्चतम डाल पर, फिर भी जोश अनंत ।
करके यदि आगे बढ़े, होगा जीवन-अंत ॥ (४७६)

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.   (௪௱௭௰௭ - 477)
 

निज धन की मात्रा समझ, करो रीती से दान ।
जीने को है क्षेम से, उचित मार्ग वह जान ॥ (४७७)

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.   (௪௱௭௰௮ - 478)
 

तंग रहा तो कुछ नहीं, धन आने का मार्ग ।
यदि विस्तृत भी ना रहा, धन जाने का मार्ग ॥ (४७८)

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.   (௪௱௭௰௯ - 479)
 

निज धन की सीमा समझ, यदि न किया निर्वाह ।
जीवन समृद्ध भासता, हो जायगा तबाह ॥ (४७९)

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.   (௪௱௮௰ - 480)
 

लोकोपकारिता हुई, धन-सीमा नहिं जान ।
तो सीमा संपत्ति की, शीघ्र मिटेगी जान ॥ (४८०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சக்கரவாகம்  |  Tala: ஆதி
பல்லவி:
உச்சியில் நுனிக் கொம்பில் ஏறிடலாமா?
உள்ள அளவில் மீறிச் செலவிடலாமா?

அநுபல்லவி:
அச்சு முறிந்தால் வண்டி நகருமோ தம்பி
அழகு மயிலிறகும் அதிகம் ஏற்றாதே நம்பி

சரணம்:
தன்வலி பகைவலி சார்ந்திடும் துணைவலி
தான்புகும் வினைவலி யாவையும் பார்சரி
உன்வலி மிகும் என்றால் அடுபோர் தொடங்கு
ஒடியும் இடையில் என்றால் உரம் கொள்ளவே அடங்கு

ஆற்றின் அளவறிந்தே ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி என்பதே திருக்குறள்
ஏற்றிடச் செய்யும் இதே ஒப்புரவாண்மை
என்றும் குன்றாத மக்களாட்சியின் மேன்மை




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22